பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 தெரி' I அடிப்படையானவை இரண்டே இரண்டு. ஒன்று உள்ளம்; மற்ருென்று உலகம். உள்ளமும் உலகமும் உறவு கொள்ளும்போதே வாழ்வு வாழ்கிறது. இல்லையேல் வாழ்வு இல்லை. இதனலேயே உலகம் இருப்பதும் இல்லா ததும், உள்ளம் இருப்பதை-இயங்குவதைப்-பொறுத் ததே என்பர் உலகத்து உயர் ஞானிகள் எல்லோரும். இக்கால எழுத்தில்-கருத்தில் இதனேயே உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாம்' என்று கவியரசர் பாரதியாரும் பாடினர். உள்ளம் திருந்தின் உலகம் திருந்தும் என்று தமிழ் முனிவர் திரு. வி. க. வும் ஓதினர். இன்ைெரு இன்றியமையாக் குறிப்பு: ஒரு வகையில் கோடானு கோடி உள்ளங்கள்மனித உள்ளங்கள்-பிறவி என்ற பெயரால் வரும்: போகும். ஆல்ை, அத்தனை உள்ளங்கட்கும் விருந்தாகும்.