பக்கம்:இலக்கிய இயல் அ-ஆ.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿 இலக்கிய இயல் என்பது தெளிவு. மனித உள்ளத்திற்கு- அது (நுண்மைப் பொருளாகியர் எண்ணத்தின் வாயிலாகவும் (பருப்பொரு ளாகிய) சொற்களின்-செயல்களின் வழியாகவும் வாழும் வாழ்க்கைக்குப் பெரும் பின்னணி-களம் இயற்கை (Nature) என்பதும் தெளிவு. இனி, அடுத்து கருதத்தக்கது: கோடானு கோடி உள்ளங்களின் கோடானு கோடி எண்ணங்களும் (கருது கோடியுமல்ல பல-குறள், 83?) அவற்றின் விளைவு களாகிய கோடானு கோடி சொற்களும் செயல்களுமே இலக்கியத்திற்கு உரியபொருள்கள் ஆகிவிடுமா? ஆழ்ந்து கருதினுல் ஆகாது-ஆகவில்லை-ஆகமுடியாது என்பது அங்கை கெல்லிக்கணி. 4 அப்படியானல் மன்பதை வழங்கும் காட்சிகளுள் எது (எவை) இலக்கியப் பொருள் (கள்)? இது இலக்கியன - இலக்கியம் செய்வோனேப் பொறுத்தது. அவன் தன் அறிவாற்றலேப் பொறுத்து எந்தப் பொருளேயும் இலக்கியப் பொருள் ஆக்கலாம். ஆம். விளக்கையும் இலக்கியப் பொருள் ஆக்கலாம்; விளக்குமாற்றையும் இலக்கியப் பொருள் ஆக்கலாம்! இதலுைம் ஒரு பேருண்மை விளங்குகிறது. அது கருத்தின் சிறப்பு காணும் பொருளில் இல்லை; காணும் கண்ணில்-காட்சி யில்தான் உள்ளது' என்பதே. இன்னும் தெளிவாகச் சொன்னல் உயர்வெல்லாம் காணும் உலகத்தில் @്; 3. கருதும் உள்ளத் தில்தான் உள்ளது. ஒட்டைச் செம் பொன்னகவும் காணலாம்; செம்பொன்னே ஓடாகவும் காணலாம். காண்போன் சிறப்பே காட்சியின் சிறப்பு. ஆராயுமிடத்துக் காண்போன் சிறப்பும்-காட்சியின்