பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இலக்கிய ஏந்தல்கள் உணர்த்கியுள்ளார். சமூகத்திற்குப் பயன்படாத எந்த இலக்கியமும், சமூகத்தில் நிலைபெறாது என்பதையே மேற்காட்டிய அறிஞர்களும், பலரும் வற்புறுத்தி வருகின்றனர். "கலை வாழ்க்கைக்காகவே' எனும் கோட்பாட்டினைக் கொண்ட இவர்களே யல்லாமல் "கலை கலைக்காகவே” எனும் கோட்பாட்டினைக் கொண் டிருக்கும் சிலரும் உள்ளனர். அவர்கள் இலக்கியத்தில் பிரச்சாரம் இடம்பெறக் கூடாது என்று வற்புறுத்தி யுள்ளனர். அவ்வாறு கூறியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கள் ஏ. சி. பிராட்லே எனும் அறிஞரும், வால்டர் ஹொரேசியோ எனும் அறிஞரும் ஆவார்கள். கலைக்கருவி யைச் சமயப் பிரச்சாரங்களுக்கும், அரசியல் o பிரச்சாரங் களுக்கும் கலைஞர்கள் பயன்படுத்தி, இலக்கியங்களை வெறும் கொள்கைகளைத் தாங்கி நிற்கும் வண்டிகளாக மாற்றியதையே, அவர்கள் கண்டித்தார்கள் எனலாம். கருத்துகள் இன்றி இலக்கியமே இல்லை. இலக்கியத்தில் இடம்பெறும் கருத்துகளும், கொள்கைகளும் எந்த அளவு இடம்பெற்றுள்ளன என்பதையே ஆய்தல் வேண்டும். கருத்துகள், கலையழகுடன் கூறப்படுதல் வேண்டும். மூன்று கருத்துகளை வலியுறுத்த எழுந்த சிலப்பதிகாரம், அதன் கலையழகால் முத்தமிழ்க் காப்பியமாய்த் திகழ் கிறது அல்லவா! ஆனால் மணிமேகலையோ புத்த மதப் பிரச்சாரத்தை மிகுதியாகக் கொண்டு, அதன் இலக்கியத் தன்மையை இழந்துவிடுகிறது. கலையிலே கருத்துகளைக் கதைகளாய் இழைத்து, படிப்பவரை அவர்களையும் அறியாது, அழைத்துச் சென்று அக்கருத்துகளில் திளைக்கச் செய்யும் கலைஞரே சிறந்தவராகிறார். உணவில் உப்பைப் போல, இலக்கியத்தில் கருத்துகளை இருப்பது தெரியாமல் இட்டுச் சமுதாயத்தை நல்வழிப் படுத்த வேண்டும். ஹட்சன் எனும் அறிஞர் கூறுமாறு