பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 சி.பா. போன்று இருபதாம் நூற்றாண்டில் இயற்கையழகில் தோய்ந்து இணையற்ற பாடல்களைப் புனைந்தவர் பாரதிதாசன் ஆவர். "இயற்கை அனைத்தும் அழகே. அந்த அழகு செந்தாமரை என்றும், நிலவென்றும், கதிரென்றும் சிரித்தது. காணும் பொருளிலெல்லாம் அழகைக் காணவும் கண்டவாறு தாமே சொல்லோவியம் திட்டவும் திறம் பெறுதல் வேண்டும். தமிழர்கள் பிறமொழி, தமிழ் மொழி நூல்களில் பார்த்தபடியே எழுதும் நிலை தீர வேண்டும். அதற்கு இச்சிறு நூல் (அழகின் சிரிப்பு) இயற்றியதன் வாயிலாக நான் இதை அறிஞர்க்கு நினைவுறுத்துகிறேன்". - என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அழகின் சிரிப்பு என்னும் தம் அரிய நூலின் முன்னுரையில் குறிப்பிடு கின்றார். தமக்கு அழகு கவிதை தநத இடங்களை அழகுறப் புலப்படுத்தியுள்ளார். அழகுப் பொருள்கள் என்றும் soils)ust gloruth [Báigāti,” (A thing of beauty is a joy forever) என்று கவிஞர் கீட்ஸ் குறிப்பிட்டது போன்றே பாரதிதாசனாருக்கும் காலையில் கீழ்த்திசையில் தோன்றும் கதிரவன் ஒளியிலும், அக்கதிரொளி கடற்பரப் பில் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சிக் கடல்நீரில் தங்கத் தகடுகளை விரிக்கும் நிலையினிலும், சோலைகளில் மலர்ந்துள்ள மலர்களிலும், முகிழ்த்துள்ள தளிர்களிலும் மேலும் தொட்ட இடங்களிலெல்லாமும் -94էՔ(3; கண்ணில் தட்டுப்பட்டாள் என்றும், மாலை நேரத்தில் மேற்றிசையில் தகத்தகாய கோலம் காட்டும் மாணிக்கச் சுடரிலும், ஆலஞ் சாலையில் கிளைகள்தோறும் கிளிக்