பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி பா 103 முழுதும் பொன்னொளி பறக்கும் பழங்கால இயற்கை செய்யும் புதுக்காட்சி பருகு தம்பி -அழகின் சிரிப்பு; 7 என்று காலைக் கதிரவன் வரவைக் களிகூரக் கூறுகின்றார். அவன் வரவால் உலகில் ஏற்படும் பரபரப்பை, இளங்கதிர் எழுந்தான்; ஆங்கே இருளின்மேல் சினத்தை வைத்தான்; களித்தன கடலின் புட்கள் எழுந்தன கைகள் கொட்டி ஒளித்தது காரிருள் போய்

  • -அழகின் சிரிப்பு : கடல் 8 என்று குறிப்பிடுகின்றார்.

கடல்நீரும் நீலவானமும் கைகோக்கின்றது. இரண் டிற்கும் இடையே கிடக்கும்வெள்ளம் அழகு வீணையாகும் அவ்வீணமேல் காற்று அடித்து அவ்விணையின் நரம்பினை அசைக்கின்றது. அப்போது வீணை இயக்கவல்ல தேர்ந்த புலவனாக அக்காற்று தென்படுகின்றது. - கடல்நீரும் நீலவானும் கைகோர்க்கும்! அதற்கிதற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம் எழில்வீணை; அவ்வீணை மேல் அடிக்கின்ற காற்றோ வீணை. நரம்பினை அசைத்தின்பத்தை வடிக்கின்ற புலவன். பொன்னுடை களைந்து, வேறே புதிதான முத்துச்சேலை தன் இடை அணிந்தாள் அந்தத் தடங்கடற் பெண்ணாள். - -அழகின் சிரிப்பு, கடல் 9,