பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் 29-4-1891 இல் கனகசபை முதலியாருக்கும், இலக்குமி அம்மை யாருக்கும் மகனாகப் புதுவையில் பிறந்தார். தமிழுடன் பிரஞ்சு மொழியும் கற்றார். இளமையிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றுத்திகழ்ந்தார். இசையுடன் கூடிய பாடல்களை எழுதினார். பள்ளித் தமிழாசிரிய ராகப் பணியைத் தொடங்கித் தம் பதினெட்டு வயதிலேயே கல்லூரித் தமிழாசிரியரானார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாரதியைச் சந்திக்கும் வாய்ப்புப் பாரதிதாசனுக்குக் கிடைத்தது. அபொழுது "எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்றபாடலைப் பாடினார். உடனே பாரதி அப்பாடலை, "பூரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது" என்றுகுறிப்பிட்டு, சென்னையில் இருந்த 'சுதேசமித்திரன்' பத்திரிகைக்கு அனுப்பிவைத்தார். 1921இல் பழநியம்மாள் என்பவரைத் திருமணம் புரிந்துகொண்டு இல்லறத்தில் ஈடுபட்டார். மொழிக் காகவும் நாட்டிற்காகவும் பல பாடல்களை இயற்றினார். நாட்டு விடுதலைக்கும் பாடுபட்டார். விடுதலைக்குப்பின் தந்தை பெரியார் ஈ.வே.ரா.வின் தொடர்பும் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளும் அவரைப் புரட்சிக் கவிஞராக்கின.