பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 இலக்கிய ஏந்தல்கள் 'கணியிடை ஏறிய சுளையும் முற்றல் கழையிடை ஏறிய சாறும் . . . பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையும் கணிபசு பொழியும் பாலும்-தென்னை நல்கிய குளிரிள நீரும் இனியன என்பேன் எனினும்-தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்” எனவரும்-அவர் கூற்றால் அறியலாம். நெல்லும், நீரும், கணியும், பிறவும் உடலைத்தான். வளர்க்கும். உடல் மட்டுமே மனிதனாகிவிடாது. அவ்வுடலுடன் உயிரும் இருக்கவேண்டும். அதற்கு மேலாக உணர்வும் இருக்கவேண்டும். உணர்வு என்பது பகுத்தறியும் உணர்வு அவ் உணர்வை அளிக்கவல்லது தமிழ் மட்டுமே. இதனை - - "செங்கல் மாற்றிய சோறும் பசுநெய் தேக்கிய கறியின் வகையும் உன்னை வளர்ப்பன தமிழா உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே' எனவரும் அவரது அடிகளால் அறியலாம். இன்று, உயர்கல்வி வரை தமிழிலியே படிககலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் பாரதிதாசன் காலத்தில் தமிழ் படிப்பது என்பது இழிவான செயலாகக் கருதப் பட்டது, தாய்மொழியாம் தமிழ் புறக்கணிக்கப்பட்டு ஆங்கிலமும், வடமொழியும் ஆட்சி செய்த காலமாக இருந்தது. இதனைக்கண்டு வெகுண்ட பாரதிதாசனார்