பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 109 ஐங்கிளைக்கும் அடி கன்றே தெளிவிலார்க்கும் தெரிவியடா திராவிடம் திராவிடமே!!' சுயமரியாதை இயக்கம் ஐந்துப் பாகுபாடுடன் இருந்த திராவிடர்களை ஒன்று சேர்க்க முயன்றது. ஆனால் அது வெறும் கனவாக ஆவது கண்டு, பெரியார் அவர்கள் தமிழர்களை மட்டுமாவது ஒன்றுபடுத்துதல் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அதனால் ஐவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியை விட்டு தமிழர்களை ஒற்றுமையுடன் வாழவேண்டினார். இவ் ஒற்றுமை ஒன்றே தமிழர்கள் உயர்வுக்கு ஒரே வழி என்று கண்டார். இதனால் பாவேந்தர் பாரதிதாசனாரும் பின்னாளில் திராவிட இனத்தைப் பாடுவதை விட்டுத் தமிழரையே பாடத் தொடங்கினார். "தமிழரெல்லாம் தமிழரையே சார்தல் வேண்டும் தமிழர் அல்லார் தமைச்சார்தல் தீமைசெய்யும்' என்றும் 'உடையினிலே நன்றாதல் வேண்டும்! உண்ணும் உணவினிலே நன்றாதல் வேண்டும்; நல்ல நடையினிலே ஒன்றாதல் வேண்டும். பேசும் நாவினிசம் ஒன்றாதல் வேண்டும்' என்றும் பாடினார். இவ்வாறு இன மேம்பாட்டிற்கும் ஒற்றுமைக்கும் அரும்பாடுபட்டார் பாவேந்தர். நாடு , பாரதிதாசன் அவர்கள் தெர்டக்கக் காலத்தில் இராட்டினப்பாட்டு, கதர்பாட்டு போன்றவற்றைப்