பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. II போல, "கதை அமைப்பினிடையே நீதிகள் இழைந்திருக்க வேண்டும். தத்துவக் கருத்துகள் கரைந்திருக்க வேண்டும். இலக்கியப் படைப்பாளி, ஒரு கணமேனும் பிரச்சாரம் செய்பவராகவோ உபதேசக் குருவாகவோ மாறிவிடாமல், படைப்பாளியாகவே இருந்து, சமூகத்தைப் பண்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும் முடிவுரை இதுகாறும் கூறியவற்றால், இலக்கியம் இன்பம் ஊட்டலே அன்றி இன்னும் பலவற்றைச் செய்கிறது என்பதும், அவற்றுள்ளும் மனித வாழ்வினைச் செம்மைப் படுத்தும், ஆசிரியத் தொழிலையும் செய்கிறது என்பதும் தெளிவாகிறது. ஆகவே, அத்தகு ஆசிரியத் தொழிலைச் செய்யும் படைப்பாளி, படைப்பாளியாக நின்று சமூகத் தைப் பண்படுத்த முயல வேண்டுமே தவிரப் பிரச்சார கனாய் மாறி, நீதிகளைக் கூறக்கூடாது இலை மறைவு காயாக இலக்கியத்தில் மறைந்துள்ள கருத்துகளுக்குப் புதிய ஆக்க உலகினை ஆக்கும் ஆற்றல், இயல்பாகவே உள்ளதெனலாம்.