110 இலக்கிய ஏந்தல்கள் பாடுங்கால் பாரத நாட்டைக் குறித்தே பாடினார். பின்னால் சுயமரியாதை இயக்கத் தொடர்பால் அவர் தமிழ்நாட்டையே நாடு’ எனக் கொண்டார். தன்மொழியில் உயர்வடையாத எந்தவொரு நாடும் மற்றத் துறையில் முன்னேற முடியாது என்பார்கள். அமெரிக்கா,ரவியா, ஜப்பான்,ஜெர்மனி போன்ற நாடுகள் வளர்ச்சி அடைந்து உள்ளதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். அது போன்று நம்நாடும் உயர்வடைய வேண்டின் முதலில் மொழியை உயர்த்த வேண்டும். தாய்மொழியைச் செம்மைப்படுத்தி அதனை உணர்த்தல் வேண்டும் தாய்மொழியைப் பாராட்டாத எந்த நாடும் வீழ்ச்சி அடையும். இதனை நன்கு உணர்ந்தே பாவேந்தர் அவர்கள், "தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தான் உயரும் அறிவுவளரும் அறமும் ஒங்கும் இமயமலை போலுயர்ந்த ஒருநாடும் தன்மொழியில் தாழ்ந்தால் வீழும்" என்றும், "தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வார்கள் என்றோம் தமிழர் மார்தட்டி வந்தாரா இல்லையா?" F என்றும் பாடினார். நாட்டின் மேன்மைக்கு முதலில் மொழியையும், மொழி பேசும் மக்களையும் அம்மக்களின் பண்பாட்டை விளக்கும் இலக்கியங்களையும் காத்தல் வேண்டும். இவற்றைக் காக்கும் உரிமையே நாட்டுரிமை, இ தனைத்
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/110
Appearance