112 இலக்கிய ஏந்தல்கள் காலத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் பெண்கள் சமுதாயத்தின் முன்னேற்றம் தடைப்பட்டது. உயிர் நாடியாகிய கல்வி அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது. அதனால் அவர்கள் அடுப்படிக்கும் பள்ளியறைக்கும் இடையிலேயே தங்களின் வாழ்வுை முடித்துக் கொண்டனர், "ஆடை அணிகலன் ஆசைக்கு வாசமலர் தேடுவதும் ஆடவர்க்குச் சேவித் திருப்பதுவும் அஞ்சுவதும் நாணுவதும் ஆமையைப்போல் வாழுவதும் கொஞ்சுவது மாகக்கிடைக்கும் மகளிர் குலம் Ł மானிடர் கூட்டத்தில் வலிவற்ற ஓர்பகுதி" வலிவற்றுச் சீர்கெட்ட இச்சமுதாயம் அதன் மற்றப்பகுதி யாகிய ஆண்சமுதாயத்தைக் கெடுத்தல் இயல்பே. ஒர் உறுப்பின் ஒரு பகுதிக்கு அழிவு ஏற்பட்டால் மற்றப் பகுதியும் அழிதல் இயல்பு. எனவே, பெண் சமுதாயம் சீர்கெட்டால் அதனால் ஆண்சமுதாயம் சீர்கெடும். பெண் களுக்குப் பேச்சுரிமை இல்லை என்றால் ஆண்களுக்கு மட்டும் அவ்வுரிமை வந்துவிடுமா என்ன? - "ஊமைஎன்று பெண்ணை உரைக்குமட்டும் உள்ளடங்கும் ஆமைநிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு' எனவே பெண் சமுதாயத்தைச் சீர்ப்படுத்தினால்தான் ஒர் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக முடியும். அதற்குப் பெண்களுக்குக் கல்வி அறிவு ஊட்ட வேண்டியது நமது கடமை. கல்வி இல்லாப் பெண்கள் வெறும் களர்நிலந் தானே,
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/112
Appearance