பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 இலக்கிய ஏந்தல்கள் விலைபோட்டு வாங்கவா முடியும்? கல்வி வேளை தோறும் கற்று வருவதால் படியும! மலைவாழை அல்லவோ கல்வி?-நீ வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி! படியாத பெண்ணாய் இருந்தால்-கேலி பண்ணுவார் என்னை இவ்வூரார் தெரிந்தால்: கடிகாரம் ஓடும்முன் ஓடு-என் - கண்ணல்ல! அண்டைவீட்டுப் பெண்களோடு! கடிதாய் இருக்கும் இப்போது-கல்வி கற்றிடக் கற்றிடத் தெரியும் அப்போது! கடல்சூழ்ந்த இத்தமிழ்நாடு-பெண் கல்வி பெண்கல்வி என்கிற தன்போடு' பெண்ணுரிமை ஆண்களுக்குப் பேச எழுத உரிமை இருத்தல் போன்று பெண்களுக்கும் உரிமை இருத்தல் வேண்டும். பெண்களுக்குக் கல்வி புகட்டிவிட்டு அவர்களுக்குப் பேச்சுரிமை இல்லை என்றால் அக்கல்வியால் என்ன பயன் விளைந்துவிடும் என்கிறார் பாவேந்தர். "பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டா என்கின்றீரோ? மண்ணுக்குக் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை? பெண்ணடிமை தீரும் மட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே' எனவே மண்ணடிமை தீர பெண்ணடிமை தீர்தல் வேண்டும். பெண்களுக்கு வீட்டிலும் வெளியிலும் (அகத்திலும் புறத்திலும்) உரிமை வேண்டும் என்கின்றார்.