பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 இலக்கிய ஏந்தல்கள் "காதலி ருவர்களும்-தம் கருத்தொரு மித்தபின் வாதுகள் வம்புகள் ஏன்?-இதில் மற்றவர்க்கு என்ன உண்டு' ஏதும் இல்லை. அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவ்விரு உள்ளங்களையும் இணைத்து மணம் முடித்து வைத்தலே ஆகும். கலப்பு மணம் தமிழர்கள் சாதியாலும் சமுதாயத்தாலும் பிளவுபட்டு அதனால் சீர்கெட்டுப் போனார்கள். அவர்களைச் சீர்படுத்தவந்த பெரியார் சாதிசமயங்களைச் சாடினார். அவற்றை நாட்டைவிட்டுத் தொலைக்க அரும்பாடு பட்டார். அதற்குப் பல வழிமுறைகளைப் பின்பற்றினார். அவற்றுள் ஒன்று கலப்பு மணம். கலப்பு மணத்தால் தமிழர் கள் ஒன்றுபட்டனர். ஒன்றுபடுகின்றனர். அன்னாரின் வழியைப் பின்பற்றிய பாவேந்தர் அவர்களும் கலப்பு மணத்தை மிகுதியாக ஆதரித்தார். அது காதல் மணத்தை யும் உள்ளடக்கியது அல்லவா? "சாதிகள் வீழ்ந்திட வேண்டும்-பெண்ணே தமிழினமோ வாழ்ந்திட வேண்டும் மாதொருத்தி வேண்டும் எனக்கும்-தமிழ் மகளாய் இருந்தால் தான் இனிக்கும்" என்கின்றார். தான் மணந்துகொள்ளப் போகும் பெண் தமிழ்ப் பெண்ணா என்று பார்த்து மணந்துகொள் அவள் இன்ன சாதி என்று பார்க்காதே என்கின்றார். தன் மகள் காதலித்தவன் என்ன சாதி என்று தந்தை மகளிடம் கேட்கின்றார். அதற்கு மகள் தரும் விடை,