பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. i 17 "அப்பா உண்மையில் அவரும் என்போல் மனித சாதி மந்தி அல்லர் காக்கை அல்லர் கரும்பாம்பல்லர்... என்கின்றார். மேலும், "சாமி சற்றும் என்கினைவில் இல்லை மாது நான் தமிழனின் மகளாதலாலே”..." என்றும் கூறுகின்றாள் தமிழன் என்றால் சாதியைச் சற்றும் நினைவில் கொள்ளுதல்கூடாது என்று தமிழனுக்கு புதிய இலக்கணத்தையும் வகுத்துக் கொடுக்கின்றார். புரட்சிவேந்தர், அதனால்தான் என்னவோ இன்று தமிழ் நாட்டில் கலப்பு மணத்தைச் சட்ட ரீதியாக்கி விட்டனர் நம் அரசியலார். அதனால் இன்று கலப்பு மணம் செய்து கொள்வார் எண்ணிக்கை சிறிதுசிறிதாக அதிகமாகிக் கொண்டு வருகின்றது. சாதியும் நாட்டை விட்டுச் சிறிது சிறிதாக நீங்கிக்கொண்டிருக்கிறது. பெரியாரின் எண்ணம் ஈடேறுகிறது. பொருந்தா மணம் இல்லறம் என்ற நல்லறம் ஆணும் பெண்ணும் மனமொத்து நடத்தப்படுவதாகும். மணம் புரிந்து கொள்ளப்போகும் மணமக்களின் விருப்பத்தைக் கேளாமல் ஏதோ தச்சன் இரு மரச்சட்டங்களை ஒன்றுபடுத்துவது போல் இரு உடல்களை ஒன்று சேர்த்தல் மணமாகாது. உள்ளத்தின் வழி உடல் இணைதல் வேண்டும். உள்ளப் புணர்ச்சி நடந்த பின்னே மெய்யுறு புணர்ச்சி நடத்தல் வேண்டும். முன்னது நடக்காமல் பின்னது மட்டும் நடப்பது மூர்க்கத்தனம்; மூடத்தனம். இதனைப் பாவேந்தர் முடத்திருமணம் என்ற பாட்டில் நன்கு இ.ஏ.-8