உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à.cur. 119 மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே! வாயடியும் கையடியும் மறைவ தெங்காள்?" சாதி இருப்பதினால் உலகம் இருளில் மூழ்கிக் கிடக் கின்றது. உலகம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டுமானால் சாதிகள் ஒழியவேண்டும். அது போலவே மதத்தலைவர்கள் வாழ்கின்ற காரணத்தால் வாய்ச்சண்டையும் கைச்சண்டையும் இருக்கின்றது. மருட்டுகின்ற மதத்தலைவர் ஒழிந்தால் நாட்டில் சண்டைகள் ஒழிந்துவிடும். பண்டைக் காலத்திலும் சமயப்பிரிவால் சண்டைகள் கொலைகள் இன்றும் சமயத்தின் காரணமாய்ப் பெரும் பெரும் தலைவர்கள் கொல்லப்படுகின்றனர். இன்று உள்நாட்டுக் கலகத்திற்குச் சமயமும் ஒரு காரணமாக இருக்கின்றது. எனவே சாதி சமயங்களை எதிர்த்துப் பல பாடல்களைப் பாடினார் பாவேந்தர். பொதுவுடைமை நாட்டில் பொதுவுடைமை அரசு அமைவதைப் பாவேந்தர் விரும்பினர். அதனால் அவர் தம் பாடல்கள் அனைத்திலும் இக்கருத்தை வலியுறுத்துகின்றார். 'ஒடப்ப ராய் இருக்கும் ஏழையப்பர் உதையப்ப ராகிவிட்டால், ஒரு கொடிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ" என்று எல்லாம் பொருளாதாரத்தில் ஒன்றுபட்டு த் திகழ வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக-அதே நேரத்தில் ஆவேசக் குரலில் முழக்கமிடுகின்றார்.