பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலை இலக்கியம் &6ó6ó கலை என்னும் சொல் முதலில் செயல் திறமையைக் காட்டுவதும், அழகு ஏற்படும் வகையில் செய்வதும், சுவை பயக்க வல்லதும் பற்பல செயல்களுக்கு உதவுவதுமான அறிவையும் ஆற்றலையும் குறித்தது. கலையில் செயல், பயன், திறமை, அழகு, சுவை என்னும் கூறுகள் உள்ளன. பயன்கூறு அதிகப்படுமானால் அது பயன்கலை என்றும், அழகுக்கூறு அதிகமானால் அஃது அழகுக்கலை என்றும் வழங்கப்படும். இக் கலைகளின் வாயிலாகவே நாகரிகமும் பண்பாடும் தோன்றி விளர்ந்தன எனக் கூறலாம். சொற்களின் பொருள் கால அளவில் விரிவதும் சுருங்கு வதும் மேம்படுவதும், தாழ்வதும் மொழிஇயல்பு இந் நெறிப்படி கலை என்னும் சொல்லும் ஒருவகைப் பொருட் பெருக்கையும் வேறுபாடுகளையும் பெற்றிருக்கின்றது. கலை என்னும் சொல்லுக்கு முதலில்வழங்கியபொருள்கள் மறந்து போய் சாத்திரம், கணிதம் முதலானவற்றைக் குறிக்கும் விரிவு ஏற்பட்டது. கலைச்சொற்கள் என்னும்போது கலை என்னும் சொல் இன்னும் அதிகமான விரிவை அடை கின்றது. கலைகள் அறுபத்து நான்கு என்று பொதுவாகக் கூறப்படுகின்றது. ஆய கலைகள் அறுபத்துநான்கு” என்பது உலக வழக்கு. கலை கருத்தின் உறைவிடம்; அழகின் பிறப்பிடம், இன்பம் இதன் பயன். இரவீந்தரநாத்தாகூர் கூறியுள்ள