பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 இலக்கிய ஏந்தல்கள் 'எல்லார்க்கும் தேசம், எல்லாருக்கும் உடைமைஎல்லாம் எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக எல்லாருக்கும் நல்ல இதயம் பொருந்திடுக" என்று பொதுவுடைமைக் கொள்கைகளை முழக்கச் செய் கின்றார். மேலைநாட்டில் ஜான்சன் என்னும் அறிஞனை 'கோல்டு சுமித்' என்பவர் பாராட்டும்போது, "அவர் தொடாத துறை ஒன்றும் இல்லை; தொட்ட துறைகளை அழகுபடுத்தாமல் விட்டதில்லை" என்பார். அது பாரதிதாசனாருக்கு முழுக்க முழுக்கப் பொருந்துவதாகும். அவர் துறைதொறும் துறைதொறும் புரட்சிச் செய்து புரட்சிக்கவியாக விளங்கினார். புரட்சிக்கவிஞர் என்றாலே அது இவரைத்தான் குறிக்கும் என்ற நிலைக்கு உயர்ந்தார். இலக்கிய நயம் இதுகாறும், பாவேந்தரின் கருத்தில் மட்டுமே கருத்து செலுத்திப் பார்த்து அவர் புரட்சிக்கவி என்று காட்டப் பட்டது. அவர் சிறந்த இலக்கியக் கவிஞரும்கூட. அவர் தனது புரட்சிக் கருத்துகளுக்கு இலக்கிய மெருகு ஊட்டும் போதே அது சிறந்து மிளிர்கின்றது. நல்ல முறையில் இலக்கியக்கலை கைவரப் பெற்றவர் பாரதிதாசன். அவர் இலக்கியக் கூறுகளுள் சிறப்புப் பொருந்தி விளங்குகிறது கருத்து என்பதனை முன்பு கண்டோம் அடுத்து இயற்கை வருணனை, உவமை, ஒசை நயம், உணர்ச்சி கற்பனை போன்ற இலக்கியக் கூறுகளும் சிறந்த முறையில் அமைந்துள்ளன.