பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

%.tarr. 121 இலக்கிய வருணனை உலகில் இயற்கையைப் பாடாத கவிஞனே இல்லை எனலாம். இயற்கையினைப் பாவேந்தர் அழகின் சிரிப்பு, என்கின்றார். அழகின் சிரிப்பில், நிலா, தாமரை, வான், காடு, சிற்றுார், பட்டினம், புறா, மயில், கடல், தென்றல், குன்றம், ஆறு, கிளி போன்றவை களி நடனம் புரிகின்றன. நிலவைப் பாடும்போது, 'அக்தி இருளாற் கருகும் உலகு கண்டேன் அவ்வாறே வான்கண்டேன் திசைகள் கண்டேன் பிந்தி அந்த காரிருள்தான் சிரித்ததுண்டோ பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே தோன் சிந்தாமல் சிதறாமல் அழகை எல்லாம் சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி "இக்தா என்றே இயற்கை அன்னை வானில் எழில்வாழ்வைச் சித்திரித்த வண்ணங் தானோ?' என்று ஒவியம் திட்டுகிறார். இரண்டு புறாக்கள். ஜோடிப்புறாக்கள். ஒன்றாக இணைந்து இரையுண்ணுகின்றது. அதன் அழகைக் கண்டு களித்த பாவேந்தர், 'இருநிலா இணைந்துபாடி இரையுண்ணும்! செவ்விதழ்கள் விரியாததாமரைபோல் ஒர் இணை மெல்லியர்கள் கருங்கொண்டை கட்டி ஈயம் காயாம்பூக் கொத்து! மேலும் ஒருபக்கம் இருவாழைப்பூ! உயிருள்ள அழகின் மேய்ச்சல்” என்று பல வண்ணங்களில் காணப்படும் புறாக்களை நம் உள்ளத்தில் படம் பிடித்துக் காட்டுவது போன்ற ஒர் ஒரு காட்சியை ஏற்படுத்துகின்றார். எங்கெங்குக் காணினும்