பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 இலக்கிய ஏந்தல்கள் சக்தியடா’ என்று பாடத் தொடங்கிய பாவேந்தர், எங்கெங்குக் காணினும் எழில் வண்ணமே என்று கூறும்படி எங்கும் இயற்கை அழகு இருப்பதை கண்டு மகிழ்கின்றார். 'பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்! பழமையினாற் சாகாத இளையவள் காண்! கசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை!" என்று எதிலும் அழகைக் காணுகின்றார். இயற்கையின் அழகை மாந்திய பாவேந்தர் நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை என்று தமது அனுபவத்தைக் கூறுகின்றார். இன்றும் துன்பம் நேரும் வேளையில் பூஞ்சோலைக்கும்" கடற்கரைக்கும் மக்கள் செல்வதைக் காணுகின்றோம். ஏனெனில் இயற்கை அழகில் நாம் இரண்டறக் கலங்குங் கால் நமக்குப் புறத்துன்பங்கள் தோன்றுவதில்லை. உவமை நயம் உவமையைக் கையாளும் முறையினால் கருத்து பொலிவு பெருகின்றது. சிறந்த முறையில் உவமை அமைந்தால் கருத்து செம்மையாக விளக்கம் பெறும், பாரதிதாசனும் உவமையை நன்கு கையாண்டுள்ளார், சிறந்த உவமையை, நினைக்க நினைக்க நெஞ்சை அள்ளும் இன்ப உவமைகளைக் கையாண்டுள்ளார். உவமைக் கவிஞர் சுரதா (சுப்புரத்தின தாசர்) தோன்றக் காரண மாக அமைந்தவர் அல்லவா! நிலாவைப் பெண்ணாகவும், நீலநிற வானத்தை அவளின் முக்காடாகவும், குன்றின்மேல் தெரியும் நிலவின் வெள்ளொளியை வெண்ணெய்யின் தி றத் தி ற்கு ம்,