பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 இலக்கிய ஏந்தல்கள் முதலான தாள வகைகளில் அமைந்த பாடல்களையும், காந்தாரி, இந்துஸ்தானி முதலிய இராகங்கள் அமைந்த பாடல்களையும் இயற்றினார். இப்பாடல்கள் தொகுக்கப் பட்டு இசையமுது-1, இசையமுது-2 என இரு தொகுதி களாக வெளியிடப்பட்டுள்ளது. அவர் பல இசைப்பாடல் களை இயற்றினாலும் அவற்றுள் தலைமைசான்று இடத் தில் இருப்பது இப்பாடல். பெண் குழந்தையைத் தொட்டிலில் கிடத்தி பெற்றோர்கள் பாடும் இனிய பாடல், "துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?-எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா?-கல் அன்பிலா நெஞ்சில் தமிழில்பாடி-c அல்லல்நீக்க மாட்டாயா?-கண்ணே அல்லல்நீக்க மாட்டாயா?-மிக வன்பும் எளிமையும் சூழும் காட்டிலே வாழ்வில் உணர்வை சேர்க்க-எம் வாழ்வில் உணர்வை சேர்க்க- நீ அற்றை கற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக்காட்ட மாட்டாயா?-கண்ணே ஆடிக்காட்ட மாட்டாயா? அறமிது என்றும் யாம் மறமிது என்றுமே அறிகலாத போது-யாம் அறிகலாதபோது-தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒருசொல் இயம்பிக் காட்ட மாட்டாயா?-ே இயம்பிக் காட்ட மாட்டாயா? புறமிது என்றும் கல் அகமிது என்றுமே புலவர் கண்ட நூலின்-தமிழ்ப்