பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 இலக்கிய ஏந்தல்கள் என்று எண்ணி பாம்பைப் பிடித்துவிடுகின்றது. உடனே குழந்தைபோல் துள்ளிக்குதித்து மேல்நோக்கி தாவுகின்றது. அங்கு கிளைகளில் உள்ள விழுதுகளை எல்லாம் பாம்பாக எண்ணி எண்ணி அஞ்சி மரத்தின் உச்சிக்குச் சென்று விடுகின்றது. மேலே சென்று குனிந்து தன் வாலைப் பார்க்கின்றது. தன்வாலும் அதற்குப் பாம்புபோல் காட்சி அளிக்கின்றதாம். "கிளையினிற் பாம்பு தொங்க விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்ததைப் போல் கிளைதொறும் குதித்துத் தாவி கீழுள்ள விழுதை எல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்" 'நல்லமுத்துக்கதையில் வரும் அ ம் மா க் க ண் ணு வெள்ளையப்பரிடம் காதல் கொண்டு தன் அன்பை வெளிப் படுத்தும் பாடல் மிக்க சுவை பயப்பது. 'அம்மியும் நீங்கள் அடுப்பும் நீங்கள் சட்டியும் நீங்கள் பானையும் நீங்கள் வீடும் நீங்கள் மாடும் நீங்கள் திகைப்படைந்து தெருவில் போனால் மரமும் நீங்கள் மட்டையும் நீங்கள் கழுதை நீங்கள் குதிரை நீங்கள் எல்லாம் நீங்களாய் எனக்குத் தோன்றும்' இவ்வாறு பாரதிதாசனின் நகைச்சுவை மிக்க இன்: உணர்வை ஊட்டி நம்மைச் சிரிக்க வைக்கின்றது.