பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பt. 129 இவ்வாறு பாரதிதாசனார் பாடல்களில் புரையோடிப் போன சமுதாயத்தைச் சீர்திருத்தத் தேவையான, பெண்கல்வி, காதல் மணம், கலப்பு மணம், விதவைமண ஏற்பு, குழந்தைமண மறுப்பு, பொருந்தா மணம் எதிர்ப்பு, ஆண்பெண் சமம், சாதிசமய விடுதலை, பகுத்தறிவு இயக்கம், மொழி, இனம், நாடு போன்றவற்றின் மேம் பாட்டிற்கான கருத்துகள், மிளிர்கின்றன. மேலும் சிறந்த இலக்கியமாகத் திகழத் தேவையான உவமை நயம், கற்பனை நயம், உணர்ச்சி நயம், ருைணனை, சுவை போன்றவை செம்மையாக அமைந்துள்ளன இவரது பாடலில் மனதைப் பறிகொடுத்த சான்றோர் பெருமக்கள் கீழ்வருமாறு பாராட்டியுள்ளனர். பாரதிதாசன் அவர்கள் புரட்சிகரமான கருத்து களை வெளிப்படுத்திய முதல் கவிஞரும் கடைசிக் கவிஞரும் ஆவார். அவருக்கு ஈடாக இன்று எந்தக் கவிஞரும் தோன்றவே இல்லை. தோன்றியவர் களும், தோன்றுகிறவர்களும் பழமைக் கருத்துகளைக் கொண்டவர்கள்தான் ஆகும். -தந்தை பெரியார் ஈ வே.ரா. பாரதிதாசனின் தமிழ்ப் பற்றுக்கு எல்லையில்லை அவர்தம் பாடலைப் படிக்கின்ற அந்நியனும் தமிழனாகிவிடுவான். -டாக்டர் அ. சிதம்பரநாதஞ் செட்டியார் எனக்குக் குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முழவும் இனிக்கும். பாரதிதாசன் பாட்டும் இனிக்கும். -தமிழ்ப் பெரியார் திரு.வி.க.