பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

G.com, 13 படி, கலையாவது தன்னலமும் பழிபாவங்களும் நிறைந்த உலகை விட்டு நம்மை அப்பால் அழைத்துச் செல்வது. இக்கூற்று இலக்கியக் கலைக்கு முற்றிலும் பொருந்து வதாகும். எவ்வாறெனில் இந்தியக் கலை குறிப்பாக இலக்கியக்கலை அளிக்கும் அழகு வெறும் செயற்கை அழகன்று; ஆழ்ந்த, உயர்ந்த கருத்துகள் மேவியது. இக் கலை மனித இனத்தின் வழிமுறை அனுபவத்தைக் காட்டுவதோடு வாழ்வின் நோக்கத்தையும் நிறைவேற்று கின்றது. கவிஞன் தான் படைக்கும் இலக்கியத்தைப் பற்றி, அதன் பொருள், உத்தி, அமைப்பு முதலியவற்றைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அவனுடைய சிந்தனை சிதறி விட்டால் அவன் படைக்கும் கலையும் குறைவுபடும். கலைஞனும் கலையும் ஒன்றவேண்டும். இந்நோக்கோடு பார்க்கின் கலையாக்கத்திற்கு இன்றியமையாத சில நிபந்தனைகள் உள்ளன என்பது புலனாகும். முதலாவதாகக் கலைஞன் இயற்கை அமைப் புகளை நன்கு கவனித்தறிய வேண்டும்; இரண்டாவதாகப் பொருள்களின் பல்வேறு இயல்புகளையும் அவைகளுக்கு உள்ள பொருத்தத்தையும் நன்கு அறியவேண்டும். மூன்றாவதாகப் பொருளை அதன் சூழலைவிட்டுத் தனித்து நோக்கி, அப்போது தன் மனத்தில் தோன்றும் மாறுதலைக் கவனிக்கவேண்டும். நான்காவதாக முன்னர்க் கவனி த்தவைகள் வேண்டும்போது தாமாகவே நினைவுக்கு வரும்படி நினைவாற்றலைப் பெருக்கியிருக்கவேண்டும். ஐந்தாவதாக, அவன் தன் மனக்காட்சியைக் கலையின் மொழியாகிய கோடுகளாலும் உருவ அமைப்புகளாலும் காட்டப் பழகியிருக்கவேண்டும். ஆறாவதாக, அவன் தன் ஆக்கவேலையில் தன் மகிழ்ச்சியையும் அருமையையும்