பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர் கய்யாம் உமர்கய்யாம் பாரசீக நாட்டின் பெருங்கவிஞர். கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிஷபூர் என்ற நகரத்தில் இவர் பிறந்தார். இவரது இயற்பெயர் கியாது.டீன் அபுல்பாத் உமர் என்பது; தம் இயற் பெயரோடு கய்யாம் என்பதையும் தாமே சேர்த்துக் கொண்டார். கய்யாம் என்பதற்குக் கூடாரம் செய் பவன்’ என்று பொருள். இத்தொழிலை இவர் தந்தை யார் செய்தார் போலும்! இவர் தமது பள்ளிப் படிப்பின் போது, இவரும் இவரது உற்ற நண்பர்கள் இருவரும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். தம்முள் ஒருவர் உயர்ந்த நிலையை அடைந்தால் மற்ற இருவருக்கும், அவர் உதவவேண்டும். அவர்களை உயர்த்தவேண்டும்’ என்பதே அந்த ஒப்பந்தம். வியப்புக்குரிய வகையில் இந்த நண்பர் களில் ஒருவர் ஒரு மாநிலத்தை ஆளும் நிலைக்கு உயர்ந் தார். அதனால் தம் தோழர்களுள் ஒருவருக்கு அரண் மனையில் உயர்பதவியைக் கொடுத்தார்; உமாருக்கு ஆண்டுதோறும் பெருந்தொகையைக் கொடுத்து வாழச் செய்தார். பணக் கவலை இல்லாதபடி வாழ்ந்த உமர்கய்யாம் தம்முடைய நீண்ட ஆயுளை, கணிதம் சோதிடம் முதலிய சாஸ்திரப் பயிற்சியில் செலவிட்டு வந்தார். இவர் இயற்றியுள்ள முகம்மதியப் பஞ்சாகம் இவருடைய கணித அறிவையும் சோதிட அறிவையும் புலப்படுத்தும். இவருடைய கல்வியறிவு ஆழமானது. வாழ்க்கையைக் குறித்தும் அது பயனின்றி வறிதாயுள்ள தன்மையைக்