பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 133 குறித்தும் பல பாடல்களை யாத்தார். இப் பாடல் களுக்கு ரூபாயாத் என்று பெயரிட்டார். ரூபாயாத் என்பதற்கு நான்கடிச் செய்யுள் என்பது பொருள். மொழிபெயர்ப்பு உமர்கய்யாம் பாரளமீக மொழியில் இயற்றிய ரூபாயாத் பாடல்களைப் பிட்ஜெரால்ட் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த ஆங்கில மொழிபெயர்ப்பைத் தழுவியே கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை உமர் கய்யாம் காடல்களைத் தமிழாக்கித் தந்துள்ளார். 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல்இவேண்டும் என்ற பாரதியின் வாக்கு மொழி பெயர்ப்பின் தேவையை உணர்த்தும். மொழிபெயர்ப்பு ஓர் அருங்கலையாகப் போற்றத் தககது. உலக நாடுகள் ஒன்றோடொன்று இலக்கியத் தொடர்பு கொள்வதற்கும் வெவ்வேறு நாட்டு மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பண்பாட்டு முறையில் உறலைப் பெருக்கிக் கொள்ளவும் மொழிபெயர்ப்பு உறுதுணையாக அமையும். மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு மொழிப் பயிற்சியும், ஒருமொழிப் புலமையும், ஒருமொழி ஆர்வமும் போதா இருமொழிப் பயிற்சியும், இருமொழிப் புலமையும் இருமொழி ஆர்வமும் வேண்டும். ஒரு மொழி யிலே கூறப்பட்ட கருத்தை அதன் அழகும் உணர்வும் சிதையாமல் வேறொரு மொழியிலே வடித்துத் தருவது பெரும் சாதனையாகும். இத்தகைய பணியைச் சிறக்கச் செய்துள்ளார் கவிமணி. மூல நூலாசிரியராகிய உமர்கய்யாம் அவர்களின் நோக்கமும் உணர்வும் சிதையாவண்ணம் அவருடைய இ.ஏ.-9