பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 இலக்கிய ஏந்தல்கள் பாடல்களைத் தமிழாக்கித் தந்துள்ளார் கவிமணி. இதனாலேயே ஆங்கில உலகில் பிட் ஜெரால்ட் பெற்றுள்ள மதிப்பைத் தமிழில் கவிமணி பெற்றுள்ளார். கவிமணியின் இந்த மொழிபெயர்ப்பைப் பற்றி, "மொழி பெயர்க்க எடுத்துக்கொண்ட ஒவ்வொரு செய்யுளிலும் கவிமணியின் ஆன்மா பிரவேசித்து நின்று செய்யுட் கருத்தின் வடிவினைத் தானே மேற்கொண்டு புதிய சிருஷ்டியாகத் தோன்றியுள்ளது என்பதே உண்மை. இச் செய்யுள்களிலே மொழிபெயர்ப்பு என்ற உணர்ச்சியே உண்டாவதில்லை. நமது நாட்டிலே நமது தாய்மொழி விருட்சத்திலே இயற்கையாகக் காய்த்து விளைந்து சுவை படக் கனிந்த கணிகள் என்று சொல்லத் தக்கனவாகவே உள்ளன" என்று வையாபுரிப்பிள்ளை அவர்கள் தமிழ்ச் சுடர் மணிகள் என்ற நூலில் கூறியுள்ளார். கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை (1876-1954) இவர் நாகர்கோவிலையடுத்த தேரூரில் 1876-ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தையார் சிவதானுப்பிள்ளை, தாயார் ஆதிலட்சுமி அம்மையார். சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் கற்றார். இவர் இலக்கணங்களையும் இலக்கியங்களையும் முறையாகப் பயின்று புலமை பெற்றார். 1901-ல் திருமணம் செய்து கொண்டார். கோட்ட பள்ளியிலும், மகாராஜா பெண்கள் கல்லூரி யிலும் தமிழ்த்தொண்டாற்றினார். இலக்கிய ஆராய்ச்சி செய்வதையும் புதிய கவிதைகள் இயற்றுவதையும் கடமை யாகக் கருதிச் செய்து வந்தார். தேவி’, ‘கவிமணி, என்னும் பெயர்களாலும் அவர் அழைக்கப்படுகிறார். மலரும் மாலையும், மருமக்கள்வழி மான்மியம், ஆசிய ஜோதி, தேவியின் கீாத்தனங்கள், குழந்தைச்