à.tir. 135 செல்வம், கவிமணியின் உரை.மணிகள் ஆகிய நூல்களை யும் கவிமணிபடைத்துள்ளார். இவரைத் 'துரும்பென மெலிந்த தேகம், துலங்கிடும் குளிர்ந்த பார்வை இரும்பென வலிய உள்ளம் இனியவே செய்யும் எண்ணம்' கொண்டவராகவும், கரும்பினும் இனிய சொற்கள் கொண்டவராகவும் போற்றுகிறார் நாமக்கல் கவிஞர். இவரே கவிமணியின் கவிதையைக் குறித்து தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பதென் செவிப் பெருமை எனப் போற்றுகிறார். இவரது கவிதை களின் மாண்பைக் குறித்து டி.கே.சி. அவர்கள் "தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்; ஆரிய செல்வம்; தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் முழுவதுமே தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத பூச்செண்டு" என்று பாராட்டுகிறார். இனிமை, எளிமையுமான மொழிநடை கவிமணிக்குக் கைவந்த கலையாகும். உமார் கய்யாம் கணிதக் கலை வல்லுநராகவும், சோதிடக் கலை நிபுணராகவும் அவர் காலத்தில் திகழ்ந் தாலும், இன்று உலக மக்கள் அவரை ஒரு மிகச் சிறந்த கவிஞராகவே நினைவு கூர்கின்றார்கள். அவர் தம் ஆழ்ந்தி கணிதப் புலமையும் சோதிடக்கலைத் தேர்ச்சியும் பொது மக்களால் மறக்கப்பட்டுவிட்டன. வாழ்க்கையில் வறிதாயுள்ள தன்மை குறித்தும் வாழ்க்கை எவ்வாறெல் லாம் திகழ்கின்றது என்பது குறித்தும் இவர் இயற்றியுள்ள பாடல்களை மக்கள் மறந்தாரல்லர் மாறாக இன்றளவும் மனத்தில் இருத்தி அக்கவிஞனின் வாழ்க்கைத் தத்துவ நோக்கிற்கு வணக்கம் செலுத்துகிறார்கள்.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/135
Appearance