13s இலக்கிய ஏந்தல்கள் மக்களின் இம்மை, மறுமை குறித்துச் சிந்தித்து எளிமையும், உயர்வும் புலப்பட இவர் இயற்றியுள்ள அருமையான ஒப்புயர்வற்ற செய்யுட்கள் ருபாயத்’ என்று அழைக்கப்பெறுகின்றன. - ‘ருபாயத்’ என்னும் நூலில் அமைந்துள்ள பாடல் களில் ஒர் அவலச் சுவை நெடுகிலும் தொனிக்கக் காண லாம். இவர் பாடல்களில் இன்ப உணர்ச்சியினைக் காண்பதசிது. இப்பிறவியில் இவ்வுலகத்தில் உண்பதும், குடிப்பதும், மங்கையுடன் இணைந்து மகிழ்ந்து வாழ்வதும் தான் உருவாக்கப்பட்ட நியதியோ என்ற ஐயுறவு உணர்ச்சி இவர் பாடல்களில் கொப்பளிக்கும். இவ்வுலகில் வாழ்ந்து முடிந்தபின் மறுபிறவியில் நமக்குக் காத்திருப்பது யாவை என்பது குறித்தும் முடிந்த முடிபாக இவர் பாடல்களில் யாதும் காணப்படவில்லை. நெஞ்சைப் பிழியும் ஒரு சோக உணர்ச்சியே இவர் பாடல்களின் அடிநாதமாய் அமைந் துள்ளது எனலாம் இவருடைய பாடல்களைப் படிப்போர் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அந்தத் தீராத சோக உணர்க்கி நிலைகொள்வதனை உணரலாம். ஆன்மாக்கள் துடிதுடித்து வருந்தும் துன்பநிலை இந்தப் "பாரசீகக் கவிதைகளிலே அங்கங்கே காணப்படுதல் உண்மை" என்பர் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள். அதற்குச் சான்றாக, வந்தவந்த மனிதரெல்லாம் (36) வழியிற் குண்டு குழிவெட்டி (31) என்று தொடங்கும் இரு பாடல்களை அவர் எடுத்துக் காட்டுவர்.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/136
Appearance