பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இலக்கிய ஏந்தல்கள் நானா உலகம் நெடுநாளா நாடி யலைந்து வந்ததுதான் 'யானே சொர்க்கம் நரகமெலாம்" என்றே கூறி நின்றதுவே (30) அடுத் , பகலும் இரவும்போல இவ்வுயர்வும் தாழ்வும் மாறிமாறியும் இவ்வுலகில் அமையும் என்பதனை மிக அழகாகக் குறிப்பிடுகிறார் உமார். மணிமுடி தரித்து மன்னவன் ஆண்ட அரண்மனைக் காலம் மாறினால் கோட்டானும் ஆந்தைகளும் பேயும் வாழும் காடாகி விடும், என்றும், வில்லேந்தி வேட்டைக்குச் சென்று வெற்றி கொண்ட வேடனின் கையினையும் பின்னாளில் நரிகள் பற்றி இழுப்பதனைப் பாரில் கண்கூடாகக் காணலாம் என்றும் கட்டுரைக்கின்றார்.(14). நம் இச்சையினால் இவ்வுலகிற் பிறக்கவில்லை. இன்னும் எவ்வெப் பிறவி வாய்க்குமோ! எவ்வெவ்வா றெல்லாம் அல்லற்பட்டு அழவேண்டியிருக்குமோ! எனவே இக்கொடுமைகளை மறந்து தொலைக்க ஒரு கிண்ணம் மது வேண்டும் என்கிறார் (72). மேலும் உமார் இவ்வுலகை ஒரு தோட்டக் களமாகவும், மனிதர் விதியின் விளையாட்டுக் கருவிகள் என்றும், இறைவன் அலகிலா விளையாட்டுடையான் என்றும் அழகுறச் சித்தரிக் கின்றார். பாடலைக் காண்போம். எல்லாம் இங்கோர் சூதாட்டம்; இரவும் பகலும் மாறாட்டம்; வல்லான் விதியே ஆடுமகன்; வலியில் மனிதர் கருவிகளாம்;