பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Lат, 13ጾ சொல்லா தெங்கும் இழுத்திடுவான்; ஜோடி சேர்ப்பான்; வெட்டுவான்; செல்லா தாக்கி ஒவ்வொன்றாய்த் திரும்ப அறையில் இட்டிடுவான் (52) எனவே விதி அதன் போக்கிலேயே செல்லும் என்றும், அதனைத் தடுத்து நிறுத்தும் வல்லமை இவ்வுலகில் எவருக்கும் இல்லையென்றும், துன்பம் அடுக்கடுக்காகத் தொடர்ந்து வருதல் உறுதி என்றும் வின்மை புலப்பட உமார் குறிப்பிடுகின்றார். எழுதிச் செல்லும் விதியின்கை எழுதி எழுதி மேற்செல்லும் தொழுது கெஞ்சி நின்றாலும் சூழ்ச்சி பலவும் செய்தாலும் வழுவிப் பின்னால் நீங்கியொரு வார்த்தையேனும் மாற்றிடுமோ? அழுத கண்ணி ராறெல்லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமோ? (53) விதி முடிந்தால் மரணம் வந்தெய்துகிறது. மரணத் திற்குப்பின் மனித நிலை என்னவென்று எவருக்காவது தெரியுமா? தெரியாது என்கிறார் உமார் கய்யாம். திட்டிக் கதவு திறந்ததடா! திறவு கோலும் இல்லையடா! கட்டித் திரையும் கண்டதடா! கண்ணும் மயங்கி நின்றதடா! ஒட்டிச் சிறிது நீ நான்என்று உரைத்த உரையும் கெட்டதடா! கட்ட காலம் பின்னையடா! நான் நீ யற்றுப் போச்சுதடா (26)