பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I4. இலக்கிய ஏந்தல்கள் நிறைவையும் கலந்து, தன் மனக்காட்சிக்குச் சிறிது சிறிதாகப் புறவடிவம் அளிப்பதற்கு ஏதுவாக ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கித் தியான நிலையில் தனக்குரிய பொருளை அகக்கண்ணால் காணப்பழகியிருக்கவேண்டும். கடைசியாகக் கலைஞன் கலையின் பொருளையும் வாழ்கை யின் ஒழுகலாற்றையும் நன்கு அறிந்து தெளிந்திருக்க வேண்டும். இதையெல்லாவற்றையும் ஒருங்கே பெற்றிருந் தால்தான் கலைஞன் தன் கலையில் வெற்றி பெறமுடியும் என் பார். இக்கூற்று இலக்கியக் கலைக்கு மிகவும் பொருத்தம் உடையதாகும். சிறப்பு சிலர் கலைகளுள் இசை மிகச் சிறந்தது என்பர்; இலக்கியமே மிகச் சிறந்தது என்பர் சிலர். அறிவின் கலப்பு இல்லாத காரணத்தாலும் கேட்டார் யாரையும் பிணிக்கும் தன்மையாலும் இசையே சிறந்ததென்பர். மனிதன் படைத்துக்கொண்ட நாகரிகக் கருவிகளுள் மிகச்சிறந்தது மொழி. மனித நடவடிக்கைகள் அனைத்திற்கும் அடிப் படை மொழியே ஆகும். அத்தகைய மொழியை ஊடு பொருளாகக்கொண்டு அமைவது இலக்கியம். ஆகையால் அது கலைகளில் சிறந்தது என்று கூறலாம். உலக வரலாற்றை மாற்றியமைப்பதில் மற்ற எல்லா வற்றையும் விட இலக்கியம் ஆற்றல் மிக்கது எனலாம். ஏனெனில் அறிவுத்துறைகள் மனிதரின் மூளைக்கு மட்டும் எட்டி இயங்குவன. ஆனால் உணர்ச்சிக்கு வடிவங்களான இலக்கியத்துறைகள் மூளையை மட்டும் அல்லாமல் மனத் தால் வாழும்வாழ்வு முழுவதையுமே இயக்குவன. மனிதன் அறிவால் அறிந்து வாழும் பகுதியைவிட, விரும்பியும் வெறுத்தும், நம்பியும் சேர்ந்தும், போற்றியும் தூற்றியும்