14? இலக்கிய ஏந்தல்கள் கொண்டதே வாழ்க்கை என்கிறார். "மலரும் மலர்கள் வாடலும் இவ்வாழ்வு நிலையாதோடலுமே உலகம் கண்ட உண்மைகளாம்" என்கிறார். இந்த உலகம் எப்படிப்பட்டவர்க்காகவும் காத்திருப்ப தில்லை; எப்படிப்பட்ட தகுதியுடையவர் மடிந்து போனாலும், அதன் காரணமாக இவ்வுலகம் இயங்குவது நின்றுவிடாது; மாறாக அது தன்போக்கில் இயங்கிக் கொண்டே இருக்கும் என்ற அரிய உலகியல் உண்மையைப் பின்வரும் பாடல் அடிகளால் உமார் கய்யாம் உணர்த்து இன்றார், யானும் நீயும் இறந்தபினும் இராஜ ராஜன் பட்டபினும் ஊனம் இன்றி இவ்வுலகம் ஊழி ஊழி நின்றிடுமால் (13) கிட்டாத பொருள்மேல் ஆசைப்பட்டு அதற்காக அலைக்கழிந்து நிற்பதில் பொருளில்லை; கிட்டிய பொருளை ஆரத்துய்க்க வேண்டும் என்ற வாழ்வியல் தத்துவத்தினைக் கவிஞர் உமார் கய்யாம் அழகுற எடுத்துக் காட்டுகின்றார். மண்ணில் மறையுப் முடிமன்னர் வாழ்வும் அரிய வாழ்வாமோ கண்ணிற் காணாச் சொர்க்கமுமோர் கனவேயன்றி நனவாமோ? கண்ணும் உன்னகப் பொருளதனை நம்பி யிருநீ. கண்ணாதது எண்ணி எண்ணி எந்நாளும் ஏங்கி அலைவது ஏன்?ஐயா (19)
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/142
Appearance