பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 இலக்கிய ஏந்தல்கள் செய்யும் ஆற்றல்; இவைகள் எல்லாம் உமாரின் கவித்வப் பெருமையை நன்றாக உணர்த்துகின்றன. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் அழகிய கவிதையிலும் அப் பெருமை நன்றாகப் புலப்படுகிறது" என்கிறார் பேராசிரியர் எஸ். வை பாபுளிப் பிள்ளை, உமார் கய்யாம் பாரசீக மொழியில் பாடிய பாடல் களைப் பிட்ஜிரால்டு என்பவர் ஆங்கிலத்தில் ருபாயத் என்று மொழிபெயர்த்தார். அப்பாடல்களைக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தமிழில் தந்துள்ளார். தமிழ் மன்னிற்கியையவும் பாடல்களைக் கவிமணி மொழி பெயர்த்துள்ளார் என்பதனைப் பின்வரும் ஆங்கிலப் பாடலுக்கு அவர் கண்டுள்ள தமிழாக்கம் கண்டு தெளியலாம். ஆங்கிலம் Herewith a leaf of bread beneath the bough, A flask of wine, a book of verse and Thou, Besides me singing in the wilderness And wilderness is paradise enow ! தமிழ் வெய்யிற் கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு தெரிந்து பாட புேமுண்டு வையத் தருமிவ் வனமின்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ?