பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*.dnr. 147 'A book of verse என்பதனைக் கம்பன் கவி' என மொழிபெயர்த்துள்ள கவிமணியின் கம்பன் பற்று காணத்தக்கது. "கவிமணியின் பாடலைப் ('ஆழி குழும் உலகாளும்' என்று தொடங்கும் பாடல்) படிக்கும்போது அது பாரசீகப் பாடலின் மொழி பெயர்ப்பு என்ற எண்ணமே நமக்கு எழுவதில்லை. நம் நாட்டுத் தாயுமானரின் பாடலைப் படிப்பது போல, அப்பர் தேவாரத்தைப் படிப்பதுபோல நம்மை மறந்து படித்து இன்ப அமைதி உறுகிறோம். எண்ணிப்பார்த்தால், கவிமணி பாரசீகப் பாடல்களை மொழிபெயர்த்தார் என்று சொல்வதைவிட, சிறந்த தமிழ்ப் பாடல்களில் திளைத்து வளர்ந்த அவருடைய கவிதையுள்ளம் பாரசீகப் பாடல்கள் சில வற்றைப் படித்த போது அவற்றில் ஒத்த கருத்துக்களைக் கண்டு மலர்ந்தது என்று கூறலாம்" என்பர் டாக்டர் மு. வரதராசனார்." நாஞ்சில் நாடு தந்த நற்றமிழ்க் கவிஞராய்த் தோன்றிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இனிமை, எளிமை, அருமை என்னும்படி கவிதைகள் அமையப் பாடல்கள் பாடியவராவர் "தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள் தமிழ்மக்களுக்குக் கிடைத்த பெருஞ் செல்வம்; அரிய செல்வம்: தெவிட்டாத அமிர்தம், ஆயுள் நாள் முழுவதுமே தமிழ் மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப் பூஞ்செண்டு”என்பார் இரசிக மணி டி கே. சிதம்பரநாதர்." கவிமணியின் நிகரற்ற படைப்பாக உமா கய்யாம் பாடல்கள் துலங்குகின்றன. 1. கவிமணி நினைவு மலர் -வாடா மலர் பக். 36.37. 2. ஷெ 'கண்ணாரக்கான ஒரு கவிஞர் ப. 18,