பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாமக்கல் கவிஞரின் நாட்டுப்பற்று பாருக்குள்ளே நல்லநாடு-எங்கள் பாரத நாடு என்றார் பாரதியார். காந்தியுகத்தின் கவிஞரான நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை, வெங்கட்ராம பிள்ளைக்கும் அம்மணி அம்மாளுக்கும் எட்டாவது பிள்ளையாக 1888 ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாள் பிறந்தார். கவிதையிலும் ஒவியத்திலும் ஆர்வம் கொண்ட கவிஞர், பாரத நாடென்றன் பாட்டன்றன் சொத்து: பட்ட யத்துக்கென்ன வீண் பஞ்சாயத்து என்று பாடினார். அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் எழுச்சி கொண்டு பாடிய காந்தியக் கவிஞர் இவர். மகாத்மா காந்தி ஆடிகளின் இன்னா செய்யாமைக் (அகிம்சை) கொள்கையில் ஒன்றிய கவிஞர் உப்புச் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டார். கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது சத்தியத்தின் கித்தி யத்தை நம்பும் யாரும் சேருவீர்! எனப் பாடிய கவிஞருக்குப் பாரதி போன்ற தேசிய கவிஞர்கள், தலைவர்கள் தொடர்பு ஏற்பட்டது. எளிமை யும் இனிமையும் கொண்ட இவர்தம் கவிதைகள் நாட்டு