பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

M. Lurr. 149 மக்களின் தேசிய உணர்வினைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. 1949ஆம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம் நாள் சென்னை அரசின் ஆஸ்தானக் கவிஞர்' எனும் விருதைப் பெற்றார். நாமக்கல் கவிஞரின் பாடல்களைத் தெய்வத் திருமலர், தமிழ்த்தேன் மலர், காந்தி மலர், தேசிய மலர், சமுதாய மலர், பெரியோர் புகழ் மலர், திருநாள் மலர், சிறுகாப்பிய மலர், இசை மலர், அறிவுரை மலர்' பல்சுவை மலர் எனப் பிரிக்கலாம். இம்மலர்களை நாட்டுப்பற்று அமையும் முறை, நாட்டு நலச் சிந்தனை என இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். நாட்டுப்பற்று அமையும் முறை என்பது நாட்டுப்பற்று பற்றிக் கவிஞர் கூறும் கருத்துகள் அவரது பாடலில் எவ்வாறு அமைந்துள்ளன என்பதாகும். இதனைப் பக்திப் பாடலில் அமைவது. மொழிப்பாடலில் அமைவது, நேரடியாகக் கூறி அமைவது என மூன்று வகையாகப் பிரிக்கலாம். நாட்டுநலச் சிந்தனை என்பது நாட்டின் நலன்குறித்து அவரின் சிந்தனையைப் பாடல்கள்வழி முறைமைப் படுத்திக் கொள்வதாகும். இதனைச் சுதந்திரத்தின் யின்றியமையாமை, சுதந்திரம் பெறும் முறை, சுதந்திர நாட்டின் நலன் என முப்பிரிவாக்கலாம். இ.ஏ.- 1. (9