பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இலக்கிய ஏந்தல்கள் என "யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனும் மனப் பாங்கை வெளிப்படுத்துகின்றார். தமிழா', உனக்கித தருணம் வாய்த்தது என்று தொடங்கும் பாடலில், இந்தியத் தாய்மனம் நொந்து கிடக்கையில் இனமுறை பேசுகின்றார்! இழிவாகும் அந்த பெரியவளின் அடிமை விலங்கறுத்துன் அன்பை நிலைநிறுத்(து) அகிலமெல்லாம் எனப்பாடுகின்றார். தமிழின் சிறப்பினைக் கூறுமிடத்து நாட்டுப்பற்றினை முன்னிறுத்துகிறார். தேனில் குழைத்து மருந்து உண்ணு தல் போன்று மொழி யின் வாயிலாக நலம் பயக்கும் நாட்டுப் பற்றுணர்வைப் பாடு கின்றார். ஒருவர்க்கு நல்லுரைகளை நேரிடையாகக் கூறுவதிலும் அவரின் முன்னோர்களின் சிறப்பியல்புகளைக் கூறி நள் வழிப்படுத்த இயலும் என்பதைக் கவிஞர், பண்டிருந்தார் சேர சோழ பாண்டி மன்னர் கினைவெலாம் பாயுமேடா உள்ளன. இன்று பார்க்கும்போது நெஞ்சினில் செண்டெ முந்தா ரென்னப் பாய்ந்து தேச முற்றும் சுற்றி நீ தீரம் வீரம் நம்முள் மீளச் சேருமாறு சேவை செய். எனத் தாய்மொழியின் சிறப்பினைக் கூறும்போதும் நாட்டி நலன் முன்னிற்பதைக் காணலாம்.