பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இலக்கிய ஏந்தல்கள் கள் ஒழிந்து, நம் நாட்டினை நாமே ஆள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கித் திகழ்கின்றது. இந்நேரடிக் கூற்று முறை, மற்ற இருவகைகளை விடச் சிறந்த பயனை நல்கும் எனல் பொருந்தும். இங்ங்ணம் நாமக்கல் கவிஞர் நாட்டுப் பற்றினைப் பக்திப்பாடல், மொழிப்பாடல். நேரடிக் கூற்று என மூவகையாகப் பகுத்துப் பாடுகின்றார். நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் நாட்டு விடுதலையின் பொருட்டுப் பாடுபட்ட தலைவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் அனைவரும் தம்மின் நல்வாழ்வினை இழந்து இன்பத்தினைத் துறந்து போராடினர். அத்தகு பெருந்தகைகளை நினைவு கூர்ந்து நாமக்கல் கவிஞர் பாடியுள்ள பாடல்கள், நாட்டு நலனில் அவர் கொண்டிருந்த பற்றினை, தேவையைப் புலப்படுத்துகின்றன. நாட்டுத் தலைவர்கள் மீது கொண்டிருந்த அன்பின்வழி நாட்டு நலத்தைப் பாடு கின்றார். இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியடி களைப்பற்றி, - பிறப்பினும் பெரியவர் பெம்மான் காந்தி இறப்பிலும் இணையலர் எம்மான் காந்தி துற பிலும் கிகளிலர் தூயோன் காந்தி மறப்பதும் நமக்கது மாபெரும் பாவம் என்னுடைய பிறப்புரிமை சுயராஜ்யம் என்னுமொரு என்று கவிஞர் பாடுகின்றார். மகாத்மாவைப் பற்றிக் காந்தி மலர் என்ற பாடல் தொகுதியைப் பாடியுள்ளார். "சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று வீர முழக்கம் செய்த, திலகரைப் பாடும்போது கவிஞர்,