பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18s இலக்கிய ஏங்கல்கள் காந்தியும் குருதேவ் என்று கைகுவித் திறைஞ்சும் தாகூர் மாந்தருள் பல நாட்டாரும் மதங்களும் மருவி வாழ்ந்து தேர்ந்தநல் லறிவை அன்பைச் செகமெலாம் பரப்ப வென்றே சாக்தி கிகேதன் என்ற சமரச சங்கம் தந்தோன் எனப் பாடியுள்ளார். தமிழன் மேம்பாட்டிற்காக உழைத்த தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் பற்றியும் பாடியுள்ளார். தமிழில் உ. வே. சா.வின் பதிப்புப்பணி தமிழுக்கு ஒரு கொடை எனலாம். உ. வே. சா. பற்றிக் கவிஞர், அல்லுபகல் கினைவெல்லாம் அதுவே யாக அலைந்த லைந்தே ஊருராய்த் திரிந்து நாடிச் செல்லரித்த ஏடுகளைத் தேடித்தேடிச் சேகரித்துச் செருகலின்றிச் செப்பம் செய்து சொல்லரியா துன்பங்கள் பலவும் தாங்கிச் சோர்வறியா துழைத்த ஒரு சாமிநாதன் இல்லை.எனில் அவன்பதித்த தமிழ்நூ. லெல்லாம் இருந்த இடம் இந்நேரம் தெரிந்தி டாதே எனப் பாடியுள்ளார். பாட்டுக்கொரு புலவன், தேசிய கவி பாரதியைப் பற்றிப் பாடும்போது, சுப்ரமணிய பாரதியை நினைத்திட் டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென் றேறும், ப்ரபஞ்சம் முழுதும் நமக் கினமாய் எண்ணும் இந்தியன்கான் என்றிடும்கல் லிறுமாப் புண்டாம்