பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B), tarr. 159 எப்பெரிய காரியமும் எளிதாய்த் தோன்றும்; எல்லையற்ற உற்சாகம் எழுந்து பொங்கும் ஒப்பறிய தமிழன்’ எனும் உவகை ஊறும்; உள்ளமெல்லாம் துள்ளியெழும் ஊக்கமுண்டாம் எனப் பாடுகின்றார். நாட்டு நலனுக்கு உழைத்தவர் களை நன்றியுடன் நினைவு கூர்கின்றார். - நாட்டுப் பெருமை உலகில், தேசிய கவிகள் தாம் பிறந்த பொன்னாட் டைச் சிறப்பித்துப் பாடுவர். நாட்டுப் பற்றும், நாட்டுப் பெருமையும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு உடையவைகளே. பாரதியும் இந்தியத் தாயைப் பாரத மாதா என விளித்துப் பாடியுள்ளார். "எங்கள் நாடு" என்ற தலைப்பில், பாரதநாடு பழம் பெரும்நாடே பாடுவம் இஃதை எமக்கில்லை ஈடே என்று பாடுகின்றார். நாமக்கல் கவிஞர் தமிழராய்ப் பிறந்து இந்தியராய் வாழ்ந்தவர். தமிழராய்த் தமிழ் நாட்டின் பெருமைகளையும், இந்தியர் என்ற முறையில் இந்திய நாட்டுப் பெருமைகளையும் புகழ்ந்து பாடுகின்றார். மண்டிலத்தே இணையிலாத வாழ்வுகண்ட தமிழகம் எனத் தொடங்கி, தமிழகத்தின் விருந்தோம்பல், வீரம், ஞான, சித்தச் சிறப்பியல்புகள் ஆகியவற்றைத் தமிழ்த் தேன்' என்ற பகுதியில் பாடியுள்ளார். இந்தியாவின் சிறப்புகளைக் கூறும்போது,