பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இலக்கிய ஏந்தல்கள் ஒரிடத்தில் கண்ட அழகையும் பெற்ற உணர்ச்சியையும் மற்றோரிடத்தில் பெற விரும்பினால் அந்த அழகையும் உணர்ச்சியையும் கற்பனை வடிவத்தில் படைத்துக் காக்க வேண்டும். மறைந்து போகும் மாலைக் கதிரவனின் அழகை ஒவியம் மறையாமல் காத்துத் தருகின்றது. வளர்ந்து மாறும் குழந்தையின் அழகைச் சிற்பக் கலை என்றும் உள்ளதாக்கிக் காட்டுகின்றது. இலக்கியம் சொற் களால் விளக்கிக் காட்டுகின்றது. கலையும் இலக்கியமும் கலைகளுள் ஒன்று இலக்கியம் என்பதையும், கலை, கலைஞன், இலக்கியம் என்பது குறித்தும் மேலே கண்டோம். இனி மற்றக் கலைகளுக்கும் இலக்கியத்துக் கும் உள்ள தொடர்பு பற்றியும், மற்றக் கலைகளுக்கு இலக்கியம் எவ்வாறு துணையாக அமைகின்றது என்பது குறித்தும் இனிக் காணலாம். மற்றக் கலைகளுக்குள் உள்ள உறவைவிட, மற்றக் கலைகளுக்கும் இலக்கியத்துக்கும் உற்ற உறவும் தொடர்பும் நெருக்கமானதும் மிகப்பழமை யானதும் பிரிக்கமுடியாததும் ஆகும். இலக்கியம் தோன்றியபோது ஆடலுடனும் இசையுடனும் தோன்றி, பின் காலப்போக்கில் ஆடலைவிட்டு, ஓசை நயத்துடன் இன்றும் இயங்கி வருகின்றது. நாட்டியக்கலை இசை, இலக்கியம் ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்தே உள்ளது. கலை இலக்கியம் இலக்கியத்தை நேர்வு இலக்கியம், சார்பு இலக்கியம் என்னும் இருகோணங்களில் பகுத்தறியலாம். இந்நோக்கம் பழங்காலம் முதலே தமிழகத்தில் நிலவி வந்ததாகும். சிலப்பதிகாரம் பண்டைத் தமிழ்நாட்டின் கலைநிலையை விரிவாக விளக்குகி ன்றது.