பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 இலக்கிய ஏந்தல்கள் என்னும் இவரது பாடல் ஆழ் ந்த பொருள் நோக்கம் கொண்டமைந்துள்ளது. சுதந்திரம் அற்ற நாட்டில் அன்பும் அதன் வழி நிகழும் அறமும் நிகழாது போகும். அறமற்ற நாட்டில் அறிவும் ஆற்றலும் குன்றும் அறிவின்றிச் செயல்படுமிடத்தில் சூதும் வாதும் தோன்றும், விளைவு இன்பமும் எழுச்சியும் இல்லா தொழியும். தொடர்ந்து துன்பமும் சோம்பலும் சூழ்ந்திடும் எனக் கூறுகின்றார். கவிஞரின் இக்கூற்று, உலக நாடுகளுக்கு ஒரு பொதுச் சிந்தனையாம். கோயில் குளங்களை இடித்தெறியும் குழந்தைகள் பெண்களைக் கொலைபுரியும் பேயின் கூத்தினைத் தடுத்திடவே பெரிதும் சுதந்திரம் தொடுத்திடுவோம் மூர்க்கர்கள் உலகினை ஆள்வதையும் முற்றிலும் தருமம் தாழ்வதையும் போக்கிடச் சுதந்திரம் வேண்டிடுவோம் என்னும் கவிஞரின் கூற்றுமூலம் அடிமை இந்தியாவில் நிகழ்ந்த கொடுமைகள் புலனாகின்றன. சமயம், மக்களுடன் ஒன்றிணைந்த ஒன்றாகும். எனவே மக்கள் சார்ந்த சமயம் புறக்கணிக்கபபடும்போது அவர்களின் பண்பாடும் இல்லாது மறையும். இங்ங்ணம் அவரவர் தத்தம் சமயத்தை இழக்க முடியாமலும் பிற சமயத்தை ஏற்க இயலாமலும் இடர்ப்படுவது நீங்கச் சுதந்திரத்தின் தேவை இன்றியமையாததாகும். : சுதந்திரம் இல்லா ஒருநாடு நம்புவி பேய்மிகும் பெருங்காடு; எதிர்ந்திடும் துயர்களைச் சகித்திடுவோம் எம்முடைச் சுதந்திரம் வகித்திடுவோம்