164 இலக்கிய ஏந்தல்கள் தேர்ந்து காட்டும் செந்நெறி மாந்தருக்குள் தீமை குன்ற வாய்ந்த தெய்வ மார்க்கமே என்று பாடுகின்றார். போராட்டத்திற்குத் துணை நிற்கும் அடிப்படைச் சக்தி மக்களின் ஒற்றுமை என்பதை உணர்ந்து மிகவும் வலியுறுத்துகின்றார். இமயம் தொட்டுக் குமரி மட்டும் இங்கி ருக்கும் யாவரும் இந்தி யாவின் மக்களென்ற சொந்தம் காணச் செய்குவோம் என்று பாடுவதன் வாயிலாக ஒருமைப்பாட்டின் தேவையைக் கூறுகின்றார். ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்தே, சுதந்திர இந்தியாவிலிருந்த சமஸ்தானங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்தார் வல்லபாய் படேல். கவிஞரின் ஒருமைப்பாட்டுப் பாடலைச் செயல்வடி வாக்கியவர் இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல். இயற்கையா மிந்த வித உரிமையைப் பறிக்க இடையிலே தடையென கின்று செயற்கையாலடக்கிக் கொடுமைகள் புரியும் தீமைசேர் அரசியல் எதையும் முயற்சியால் திருத்த முடியாதுபோனால் முற்றிலும் அதனையே நீக்கி அயர்சியில்லாதஅரசுமற்றொன்றை அமைப்பதும் குடிகளின் உரிமை என்று புதிய அரசின் தேவையைப் பாடுகின்றார். கவிஞரின் இக்கூற்று இன்னும் நின்று நிலவும் தன்மையது.
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/164
Appearance