166 இலக்கிய ஏந்தல்கள் நிலையில் போராடிய மக்கள் அச்சுதந்திரம் பேணுவதில் இல்லையே என்பதை உணர்ந்து, நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டிற்காக மனமாற்றத்தை வலியுறுத்து கின்றார். பொதுவுடைமை நாட்டு மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக்கிருக்குமாயின் நாட்டுச் சுதந்திரம் சட்ட திட்டங் களும் பயனற்றுப் போகும். எனவே பொருளாதார ஏற்றத் தாழ்வில்லா மக்கள் சமுதாயமே சுதந்திர இன்பத்தை அனுபவிக்க இயலும். இதனை உணர்ந்தே கவிஞர், பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும்; பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்; கூட்டாளி வர்க்கங்கள் குணம்மாற வேண்டும்; குற்றேவல் தொழிலென்ற மனம் மாற வேண்டும் எனப் பாடுகின்றார். தொடர்ந்த பூமிதான இயக்கத் தினையும், பூதான இயக்கத் தந்தை வினோபா அவர் களையும் பாடுகின்றார். சீர்திருத்தம் சமுதாயத்தை சீர்திருத்த வேண்டி, இந்துக்களிடையே தீண்டாத பேர்கள் ஹரிஜன ஏழைகள் தம்மைப் பந்துக்கள் போலப் பரிவுடன் நடத்தி அவருடன் பழகுதல். வேண்டும் என்று தீண்டாமை பற்றியும்,
பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/166
Appearance