பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி.பா. * 167 கள்ளுபீர் சாராயம் காம வகைகள்-கெட்ட கஞ்சா அபின்களெல்லாம் ஓடி ஒளிக்க பிள்ளைக்குட்டி பெண்ஜாதி வயிறார உண்ணப் பெற்றதே சுதந்திரமென் றாடுராட்டே! என மது ஒழிப்பு பற்றியும், மறுமணம் மாதர்க்கில்லை மதலையை விதவையாக்கி நறுமணப் பூவுமின்றி நல்லதோர் துணியுமின்றி உறுமணல் தேரைபோல ஒளிந்திருந் தொடுங்கச் செய்யும் சிறு மனப்பான்மை யோகம் தேசத்தின் நாசம் என விதவைகள் மறுமணம் பற்றியும் பாடுகின்றார். சத்தியத்தின் நித்தியத்தைப் பாடிய நாமக்கல் கவிஞர் தம் பாடல்கள் மூலம், நாட்டுப்பற்று, நாட்டுநலச் சிந்தனை என்னும் பொருளமைப்பினை வெளிப்படுத்தி யுள்ளார். பக்திநெறி நின்று இறைமை உணர்வுடன் தாய்மொழி போற்றி நாட்டுப் பற்றினைப் பாடும் முறையும், சுதந்திரத்தின் தேவை, அடையும் முறை, என்பவற்றை உள்ளடக்கமாகக் கொள்ளும் நாட்டுநலச் சிந்தனையும் கருத்திற் கொள்ளத்தக்கது. பாட்டாளி மக்களின் பசிதீரப் பாடிய, தேசிய காந்தியுகக் கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளையின் நாட்டுப் பற்றுணர்வு போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரிய தாகும்.