பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

bl.1 1ir. 169 அற்பனையினைக் கவிதையில் வடிக்கத் தொடங்கிவிடுவார். இயவு நீண்ட நேரம் விழித்து எழுத்துப் பணியில் ஈடுபடுவார். இக்கவிதையுள்ளம் பின்னாளில் சிறந்து வளர்ந்து ஒளிவிட்டது. பிற்பட்ட வகுப்பில் பிறந்த கவிஞர்க்கு இயல்பாகவே தாழ்த்தப்பட்ட-ஒடுக்கப்பட்ட மக்கள்பால் ஆழ்ந்த பரிவுணர்ச்சி நிரம்பியிருந்தது. தொழிலாளர் நல உரிமைக்கு இவர் கவிதைகள் குரல் கொடுத்தன. முன்னணி', ஜனயுகம் என்ற பத்திரிகை களில் இவர் எழுத்துவண்ணம் மிளிர்ந்தது. நான்காண்டு களுக்குப் பின்னர் இவர்தம் அரசியல் ஈடுபாட்டினை நிறுத்திக்கொண்டு தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கம்பனிடத்தில் தனித்த ஈடுபாடு கொண்ட கவிஞர் 1955ஆம் ஆண்டில் விதியோ? வினையோ?” ான்னும் இசை நாடகத்தினைப் புதிய பாங்கில எழுதின.rர். 1957-58 ஆம் ஆண்டுகளில் ‘மாதவி அாவியம்’, ‘கண்ணப்பன் கிளிகள்', 'புத்தர் காவியம்’ என்னும் மூன்று கவிதை இலக்கியங்களைப் படைத்தார். இதில் புத்தர் காவியம் மட்டும் முற்றுப் பெறாமல் நின்று விட்டது. இத் பின்னர், கம்பனுக்கு வாய்த்த சடையப்ப வள்ளல் போல் கவிஞர் தமிழ் ஒளிக்கு வாய்த்த திரு. செ. து. சஞ்சீவி அவர்கள் முயற்சியால் வெளியான தமிழ் ஒளியின் கவிதைகள்’ என்னும் தொகுப்பில் புத்தர் பிறந்தார்’ என்னும் முதற் கவிதையாக நிற்கின்றது. இதன் பின்னர் இலக்கிய ஆராய்ச்சிக் கண்கொண்டு வெளியிடப்பெற்ற சிலப்பதிகாரம் நாடகமா, காவியமா? 'திருக்குறளும் கடவுளும்', 'தமிழர் சமுதாயம் முதலிய உரைநடை நூல்கள் 1959-60ஆம் ஆண்டுகளில் வெளி வந்தன. 1962ஆம் ஆண்டிற்குப் பின்னர்க் கவிஞரின் வாழ்வில் கொடிய என்புருக்கி நோய் பற்றியது. அஃது உடம்பை