பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&.ಆಗ್. 17 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு -திருக்குறள் : 392. என்னும் குறட்பா உரையில் "எண்ணென்பது கணிதம்: அது கரவியும் செய்கையுமென இருவகைப்படும்” என்று பரிமேலழகர் உரை எழுதியிருப்பதிலிருந்து சார்புத் தன்மை பற்றித் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதை அறியலாம். இந் நிலையை இலக்கியத்துக்கும் கொண்டு பொருத்திப் பார்த்தனர். இதனால் இலக்கியத்திற்காக இலக்கியம், பிற கலைகளுக்காக இலக்கியம் என்னும் இ நெறிகளைக் கைக்கொண்டனர். - இலக்கியம் பிறகலைகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. தானும் மற்றக் கலைகளுக்கு நிலைக் களனாகவும் வளர்ச்சி வாய்ப்புக்களனாகவும் அமைந் துள்ளது. இசை தோன்றுதற்கு நிலைக்களனாகவும் இசைத் துறை வளர்ச்சி பெற இசைப்பாக்களைக் கொண்டும் இலக்கியம் சிறப்படைகின்றது. அதுபோலவே நாடகக் கூறுகளை உட்கொண்டு அதாவது சுருங்கச் சொல்லல், இசை, ஆட்டம், பாட்டு இவற்றை உறுப்பாகக்கொண்டு விளங்கி நாடகத்துறை வளர்ச்சிக்கு வாய்ப்பாக அமைகின்றது. பாடல்களில் புனையப்படும் பல வண்ணனைகள் ஒவிய ஆக்கத்திற்குத் துணைபுரிவனவாக உள்ளன. சங்க இலக்கியக் காட்சிகள் பலவற்றை உயிருள்ள ஒவியமாக்கி யுள்ளனர். - நாடகத்தின் வளர்ச்சிபெற்ற துறையான திரைபடக் கலைக்கு இலக்கியக்கலை சிறப்பான தொண்டாற்றி