பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 இலக்கிய ஏந்தல்கள் யும் உளளததையும் விடாது உலுக்கியெடுத்தது. 29. 3. 1965ல் கவிஞர் வாழ்வு முடிந்தது. வாழ்ந்தது நாற்பதே ஆண்டுகள் எனினும் கவிஞர் வற்றாத கவிதைச் செல்வத்தைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு வாரி வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். தமிழர்தம் தவக் குறைவே கவிஞர் நீண்ட ஆண்டுகள் வாழக் கொடுத்து வைக்காதது என்பது அவர் விட்டுச் சென்ற கவிதை களைப் படித்துப் பார்க்கும்பொழுது புலனாகின்றது. இனி, அவர் படைத்த கவிதைச் சோலையில் உலா வருவோம். கவிஞர் சந்த இன்பம் தழைக்கப் பாடுவாரி என்பது அவர் புனைந்த பாடல்கள் பலவற்றின் வழி விளங்கு கின்றது. 'ஞாயிறு வணக்கம்’ எனுந்தலைப்பில் அமைந்துள்ள கவிதையில், கோலமாய் வளைந்தகடல் மேலே-ஒள் கொண்டுவரு கின்றகதிர் வேலே! -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 77; 2-3 தோள்மிசை அமர்ந்ததமிழ் போலே-மலைத் தோள்மிசை துலங்கியசெங் கோலே! -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 7.; 11-12 பயந்திருட் கடிந்தவெற்றி வேலே-உன் பார்வையில் வடியும்ஞானப் பாலே! -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 77; 19-20