பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பி.பா. 171 என்ற வரிகளில் கொஞ்சிடும் சந்த வன்மை செவியினை நிறைவித்துச் சிந்தையினை மகிழ்விக்கக் காணலாம். இயற்கையில் ஈடுபாடு மிகுந்த கவிஞர் இயற்கையை வருணிக்குந் திறம் நம் நெஞ்சை அள்ளுகின்றது. புதுவை தென்னை மரங்கள் நிறைந்த நகரம். தென்னம் பந்தல்' என்ற தலைப்பில் அவர் புனைந்திருக்கும் கவிதை அவர்தம் வருணனைத் திறத்தினையும் ஒலிநயம் சமைக்கும் ஆற்றலினையும் ஒருங்கே காட்ட வல்லதாகும். வானக் கருமுகில் மீது செங்கதிர் வந்து படுகின்ற வேளை வெடித்தது தென்னம் பாளை! ஞானக் குமரி நகைத்தனள் பார், அதோ நாற்புறமும் தென்னஞ் சோலை! கன்கு விடிந்திடும் காலை ! -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 80 1-2 இதுபோன்றே காவிரியாற்றைக் கவிஞர் தென்மகள் வருகின்றாள்' என்ற கவிதையில் சிறக்கப் பாடுகின்றார். பூவிரி சோலைகள் யாவும் வணங்கப் பொன்மலர் தான்சிறந்தக் காவிரி அன்னை வருகின்றாள் பொற் கழல் கலகல வென்றே! -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 91; 1-2 பூந்துகில் சுற்றிப் பொற்கரை யிட்டுப் புன்னகை தான்சிந்தித் தீந்தமிழ் பாடித் திரையொடும் ஆடித் தென்மகள் வருகின்றாள்! -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 91 4-5