பக்கம்:இலக்கிய ஏந்தல்கள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 இலக்கிய ஏந்தல்கள் இயற்கை வருணனையோடு இனிய கருத்துக்களையும் புகுத்தி எழுதுவதில் வல்லவர் கவிஞர் என்பதனை அவர் தம் 'நிலா பற்றிய கவிதையால் அறிகிறோம். பூட்டிய வீட்டைத் திறந்து குடும்பப் புகழ்விளக் கேற்றிடவே-சுடர் தீட்டப் புகுந்த புதுமனப் பெண்எனத் தென்படும் வட்ட நிலா-கண் முன்படும் வட்ட நிலா -தமிழ் ஒளியின் கவிதைகள் பக். 95 1.5 - *தாமரைப் பெண்’ என்ற கவிதையில் கற்பனை நயமும் ஒசை நயமும் ஒன்றையொன்று போட்டியிட்டுச் செல்லக் காணலாம். தாமரை மூடிய போர்வை அகற்றியென் மேனியில் முத்தங் கொடுத்தவன் யார்?-மனப் பித்தங் கொடுத்தவன் யார்?-இமை மூடிய கண்கள் விழிக்க எனக்கொரு மோகங் கொடுத்தவன் யார்?-புதுத் தாகங் கொடுத்தவன் யார்? -தமிழ் ஒளியின் கவிதைகள் (பக். 83 1.6. (தாமரை) கதிரவன் மொட்டென் றிருந்தவுன் மேனியிற் காலையில் முத்தங் கொடுத்தவன் நான்-மனப் பித்தங் கொடுத்தவன் நான்! - ஒரு